இயக்குநர் போயபதி ஸ்ரீனு இயக்கத்தில் உஸ்தாத் ராம் பொதினேனி, ஸ்ரீலீலா நடிப்பில் ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிப்பில் ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீனின் ‘ஸ்கந்தா’படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது!
‘அகாண்டா’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் போயபதி ஸ்ரீனு, உஸ்தாத் ராம் பொதினேனியுடன் இணைந்துள்ளார் ஒரு மாஸ் ஆக்ஷன் என்டர்டெய்னராக உருவாகும் இப்படத்தில்,. இதுவரை பார்த்திராத மாஸ் கெட்-அப்களில் ராமை முற்றிலும் மாறுபட்ட மாஸ் அவதராத்தில் காட்ட இருக்கிறார் இயக்குனர்
படத்தின் முன்னணி நடிகர்களுடனும், நடனக் கலைஞர்களுடனும் படத்தின் கடைசி பாடலோடு ‘ஸ்கந்தா’ படத்தின் மொத்த படப்பிடிப்பையும் படக்குழு தற்போது முடித்துள்ளது.
டீசர் மற்றும் டைட்டில் க்ளிம்ப்ஸ் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற நிலையில், படத்தில் இருந்து வெளியான முதல் சிங்கிள் ‘நீ சுட்டு சுட்டு’ பாடலும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. எஸ் தமன் இசையமைத்த இந்தப் பாடல் அனைத்து இசை தளங்களிலும் முதலிடத்தில் உள்ளது. ராம் மற்றும் ஸ்ரீலீலா இந்தப் பாடலில் தங்களது அசத்தலான நடனத்தின் மூலம் பாடலை இன்னும் சிறப்பாக்கியுள்ளனர்.இப் படத்திற்கு சந்தோஷ் டிடேக் ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி உலகம் முழுவதும் ‘ஸ்கந்தா’ வெளியாக உள்ளது.