மில்லியன் ஸ்டுடியோஸின் எம்.எஸ். மன்சூர், தமிழ்த் திரையுலகில் தனது முதல் தயாரிப்பான வெப்பன்’ திரைப்படத்தை தொடர்ந்து தனது இரண்டாவது தயாரிப்பாக ‘சிரோ’என்ற படத்தை தொடங்கியுள்ளது .
முன்னாள் விளம்பர பட இயக்குநரும் வடிவமைப்பாளருமான விவேக் ராஜாராம் இந்த ஃபேண்டசி படத்தை எழுதி இயக்குகிறார். இப்படத்தின் மூலம் பிரார்த்தனா சாப்ரியா தமிழ் திரை உலகில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
இப்படம் குறித்து இயக்குனர் விவேக் ராஜாராம் கூறும்போது, “’சிரோ’ ஒரு கற்பனையான கதாபாத்திரம் – பெண் குழந்தைகளை பாதுகாக்கும் ஒரு தேவதை. நான் முதன்முறையாக பிரார்த்தனாவைச் சந்தித்தபோது, அவர் இந்த கதாபாத்திரத்திற்கு வலுவாக நியாயம் செய்வார் என்று உணர்ந்தேன். மேலும், அவரது தாயார் அவரை இந்த முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அனுமதித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.
“பெட் டைம் ஸ்டோரிஸ் என்ற காம்ப்ளக்ஸ் சப்ஜெக்ட்டை படம் கொண்டுள்ளது. படம் ஒரு குறிப்பிட்ட ஜானருக்குள் வராது. ஒவ்வொரு 20-25 நிமிடங்களுக்கும் களம் மாறிக்கொண்டே இருக்கும். பெண்கள் அடிப்படையிலேயே மிகப்பெரிய சக்தியைக் கொண்டவர்கள் மற்றும் அவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் தனித்துவமான குணத்தைக் கொண்டுள்ளனர் என்ற உண்மையை இந்தப் படம் மூலம் முன்வைக்க முயற்சி செய்துள்ளேன்”. என்கிறார்.
இப் படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் தொடங்க உள்ளது. மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை இறுதி செய்யும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. இப்படத்தின் ஒளிப்பதிவை கிஷன் சி.வி, மேற்கொண்டுள்ளார்