தமிழ்த்திரையுலகில் கடந்த 1960ம் ஆண்டு வெளியான ‘களத்தூர் கண்ணம்மா’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கமல்ஹாசன். ‘அம்மாவும் நீயே அப்பாவும் நீயே’ என பால் வடியும் முகத்துடன் ரசிகர்களின் நெஞ்சங்களை கொள்ளை கொண்ட நடிகர் கமல்ஹாசன் தற்போது தற்போது இந்திய சினிமாவின் அடையாளமாக பலராலும் அறியப்படுகிறார்.
சினிமாவில் நடிகராக அறிமுகமாகி 64வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள உலக நாயகன் கமல்ஹாசனை ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் (கமல் 64) ஐ கொண்டாடி வருகின்றனர்.
இதையடுத்து அனைவருக்கும் நன்றி தெரிவித்து கமல் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது, “64 ஆண்டுகள் ஒருவன் வாழ்க, என்று வாழ்த்தினாலே அது பெரிய ஆசிதான். அது என் உடலுக்கான வாழ்த்தாக இல்லாமல் என் கலை வாழ்வுக்கான ஆசியாக இருப்பது என்னைவிட திறமையாளர்கள் பலருக்கும் கிட்டா வரம்.
வாழ்த்தும் அனைவருக்கும் என் சிரம் தாழ்த்தி பணிவுடன் நன்றி. எஞ்சி உள நாட்கள் என் மக்களுக்காக” இவ்வாறு அவர் கூறியுள்ளார். இப்பதிவு சமூக வலைத்தளங்களில் .வைரலாக பரவி வருகிறது.
இந்நிலையில் கமலின் மகளும் நடிகையுமான ஸ்ருதி ஹாசன் ஸ்பெஷல் போஸ்டருடன் ட்வீட் போட்டுள்ளார். அதில், “பல்வேறு ஏற்றத் தாழ்வுகள், வெற்றிகள், சவால்கள் என எல்லாவற்றையும் சந்தித்துள்ள உலக நாயகனின் அயராத முயற்சிக்கு இடையில் எதுவும் வர முடியாது. 6 தலைமுறைகளாக திரையுலகில் இணையற்ற பேரரசர் கமல், சினிமாவில் தனது 64 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார்” என ட்வீட் செய்துள்ளார்.
முக்கியமாக இந்த டிவிட்டர் பதிவில் ஸ்ருதி ஹாசன் பகிர்ந்துள்ள கமலின் போஸ்டர் அவரது ரசிகர்களை பெரிதும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. சிம்மாசனம் ஒன்றின் மீது செம ஸ்டைலாக கமல் அமர்ந்திருக்கும் நிலையில், அவரை சுற்றிலும் பெரும் ரசிகர் பட்டாளமே சூழ்ந்திருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.இப்போஸ்டர் சமூக வலைதளங்களில் பெரும் வைரலாக பரவி வருகிறது