மூன்று ஜோடிகள். அவர்களது காதல் வாழ்க்கை ,அதில் இருக்கிற இடர்கள் . இவைகளை தொகுத்து ஒரு கதையாக சொல்லியிருக்கிறார்கள்.இதைத்தான் வான் மூன்று என்பதாக வகைப்படுத்தி இருக்கிறார்கள்.
காதலே சிக்கல் என ஒரு ஜோடி . ஆதித்யா பாஸ்கர்–அம்மு அபிராமி.
திருமணமாகி 10 மாதங்களில் மனைவியைப் பிரிய வேண்டிய நிர்பந்தத்தில் வினோத் கிஷன் –அபிராமி வெங்கடாசலம் மற்றொரு இணை..
மூன்றாவது ஜோடியாக டெல்லி கணேஷ்–லீலா சாம்சன். இவர்களில் லீலா சாம்சன் இறந்து போகலாம் என்கிற எதிர்பார்ப்பு. இந்த மூன்று ஜோடியும் ஒரே மருத்துவமனையில்.!உணர்வு பூர்வமான அணுகுமுறை கதையின் பலம்.
பட்டு நூலினால் பின்னப்பட்ட திரைக்கதை.
இந்த மூன்று ஜோடியில் மனதுக்கு இதமாக லீலா சாம்சன் இருக்கிறார் . முதுமை. கணவனை பிரிய நேரிடுமோ என்கிற பயமும் ,அதை சந்திக்க துணிக்கிற பலமும்தான் உயரிய பாசத்தின் வெளிப்பாடு.
“இந்த கிழவி என்னை விட்டுப் பிரிந்துவிடுவாள் ,அதன் பின்னர் எனது நிலை “என கலங்குவது டெல்லி கணே ஷின் முத்திரை நடிப்பு.
ஆதித்யாபாஸ்கர் அம்முஅபிராமி இருவரும் கதைக்குப் பொருத்தமானவர்கள் , அம்முவைப்போல குணமுள்ள காதலி இருந்தால் காளையர்கள் டாஸ்மாக்கை நாடமாட்டார்கள்.
ஒளிப்பதிவாளர் சார்லஸ் தாமஸ்.
எழுதி இயக்கியிருக்கிறார் ஏ.ஆர்.எம்.முருகேஷ்.
உருவ வழிபாடு இல்லாத காதலுக்கு உருவம் கொடுத்திருக்கிறார்கள்.