ஷியாம் சிங்க ராய் படத்தை தொடர்ந்து தயாரிப்பாளர் வெங்கட் போயனப்பள்ளி. தற்போது, விக்டரி வெங்கடேஷ் நடிக்கும் “சைந்தவ்” படத்தை நிஹாரிகா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் கீழ் தயாரித்துள்ளார்.
‘HITverse’ திரைப்பட இயக்குனர் சைலேஷ் கொளனு இப்படத்தை இயக்கி வருகிறார்.இப்படத்தில்,நவாசுதீன் சித்திக், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ருஹானி ஷர்மா, ஆண்ட்ரியா ஜெர்மியா மற்றும் சாரா உட்பட பலர் நடித்துள்ளனர். விக்டரி வெங்கடேஷின் 75வது படமான “சைந்தவ்”உருவாகி வருகிறது.
சண்டை இயக்குனர்கள் ராம்-லக்ஷ்மண் மேற்பார்வையில் மொத்தம் 16 நாட்களில் 8 முக்கிய நடிகர்களுடன் கலந்து கொள்ளும் உயர்-ஆக்டேன் உணர்ச்சிகரமான கிளைமாக்ஸை படமாக்கி முடித்துள்ளனர்.
சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, எஸ் மணிகண்டன் ஒளிப்பதிவு செய்கிறார் பான் இந்தியா படமாக அனைத்து தென் மொழிகளிலும் ஹிந்தியிலும் வரும் டிசம்பர் 22 அன்று கிறிஸ்துமஸின் போது வெளியாகிறது.