உஸ்தாத் ராம் பொதினேனி இயக்குநர் பூரி ஜெகன்நாத் \கூட்டணியில் பான் இந்திய படமாக ‘டபுள் ஐஸ்மார்ட்’ உருவாகி வருகிறது.
இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ள நிலையில், இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது தாய்லாந்தில் தொடங்கியுள்ளது.
இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் சஞ்சய்தத், மும்பையில் நடந்த முதல் கட்ட படப்பிடிப்பை தொடர்ந்து இரண்டாவது கட்ட படப்பிடிப்பிலும் இணைந்துள்ளார்.
தாய்லாந்தில் நடந்த படப்பிடிப்பில் ராம்பொதினேனி , சஞ்சய் தத், பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் ஆகியோர் இணைந்து எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படங்களை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது
இப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் அடுத்த ஆண்டு மகா சிவராத்திரி நாளில் (மார்ச் 8, 2024) வெளியாகிறது.