ஜி.வி.பிரகாஷ், க்ரிதி கார்பனந்தா, ராஜேந்திரன், பாலசரவணன், ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘புரூஸ்லீ’ படத்தை பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கியுள்ளார். கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீடு வரும் 21ஆம் தேதி நடைபெறும் என்றும், இந்த படம் வரும் நவம்பர் 11ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகும் எனத் தெரிகிறது.