கார்த்தி மூன்று வேடங்களில் நடித்துள்ள ‘காஷ்மோரா’ வரும் தீபாவளி அன்று திரைக்கு வரவுள்ள நிலையில் இப்படத்தின் கேரக்டர்கள் குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளது.இதில் கதையின் நாயகிகளாக நடிக்கும் நயன்தாரா, ‘ராணி ரத்தினம்மா தேவி’ என்ற கேரக்டரிலும், ஸ்ரீதிவ்யா, ஆராய்ச்சியாளர் வேடத்திலும் நடித்துள்ளனர்.என்றாலும் இதில் கார்த்திக்கும் இவர்களுக்கும் இடையே நோ ரொமான்ஸ் என்கிறது கோலிவுட்.ரொமான்சே தேவைப்படாத அளவுக்கு ஆக்சன், ஹாரர், காமெடி காட்சிகள் சிறப்பாக அமைந்துள்ளதாம்.