தமிழில் ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. ஷங்கரின் உதவியாளரான இவர் விஜய் நடித்த,தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கியுள்ளார் இந்த மூன்று படங்களுமே தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்ததால்,பாலிவுட் பாஷா என அழைக்கப்படும் ஷாருக்கானை இயக்கும் வாய்ப்பு தேடி வந்தது.
இப்படத்துக்கு ஜவான் எனப்பெயரிடப்பட்டு, இதில்,ஷாருக்கானுடன் விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோன், ப்ரியா மணி, யோகி பாபு உள்ளிட்ட பலர் ஜவான் படத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.தற்போது இப்படம் வரும் செப்டம்பர் 7ம் தேதி வெளியாகிறது.
இப்படத்தில் நடிகர் விஜய் கேமியோ ரோலில் நடித்துள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், அதிகாரபூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை இந்நிலையில் தற்போது மீண்டும் இந்த செய்திகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
இப் படத்தில் விஜய் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்கிறார்கள். அட்லீ இயக்கிய தெறி படத்தில் விஜய் போலீஸ் கேரக்டரில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதன் சீக்வெல்லாக இந்த கேரக்டர் இருக்கும் எனவும் கூறப்படுகிறது!