நடிகை சமந்தா, தற்போது விஜயதேவரகொண்டாவுடன் ஜோடிசேர்ந்து நடித்துள்ள குஷி படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். நிகழ்ச்சியில், இருவரும் மேடையில் ஜோடியாக நடனம் ஆடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினர்.
நடனத்தின் உச்சமாக சமந்தாவை விஜயதேவரகொண்டா அலேக்காக தூக்கி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து மேடையில் பேசிய விஜய் தேவரகொண்டா, குஷி படத்தில் சமந்தாவுடன் நடித்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.
முக்கியமாக சமந்தாவுடன் நடித்தது குறித்து ரொம்பவே மகிழ்ச்சியாக பேசிய விஜய் தேவரகொண்டா,”குஷி படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பில் சமந்தாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவர் நிலைமையை புரிந்துகொண்டு சில நாட்கள் அவரை ஓய்வெடுக்க சொன்னோம். வரும் செப்டம்பர் 1ம் தேதி குஷி திரைப்படம் வெளியாகும் போது சமந்தாவின் முகத்தில் புன்னகையை பார்க்க விரும்புகிறேன்.
அவர் எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கவேண்டும் என்பதையே நான் விரும்புகிறேன் ” எனவும் பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முன்னதாக குஷி படப்பிடிப்பின் போது விஜய் தேவரகொண்டா, சமந்தா இடையே காதல் மலர்ந்துவிட்டதாக கிசுகிசுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.