நடிகர் விஜய்யின் மகன், லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இதை லைகா நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில், “ஜேசன் சஞ்சயை இயக்குனராக அறிமுகம் செய்வதில் நாங்கள் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும்,லைகா நிறுவன தலைவர் சுபாஸ்கரனை சந்திப்பது, புதிய படம் தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது உள்ளிட்ட புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து லைகா நிறுவன தலைவர் சுபாஸ்கரன் “ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் வளர்ந்து வரும் நட்சத்திரங்கள் இருப்பார்கள், மேலும் இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்க தொழில்துறையைச் சேர்ந்த சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்” என செய்திக் குறிப்பில் தெரிவித்திருக்கிறார்.
சென்னையில் பள்ளிப் படிப்பை முடித்த ஜேசன் சஞ்சய், கனடாவில் கல்லூரி படிப்பை முடித்து,. கனடா பல்கலைக்கழகத்தில் சினிமா மேக்கிங் முடித்ததும், லண்டனில் திரைக்கதை எழுதுவதற்கான சிறப்பு பயிற்சியை எடுத்துள்ளார்.
ஜேசன் சஞ்சய் ஏற்கனவே தனது நண்பர்களுடன் இணைந்து பல குறும்படங்களை இயக்கியிருக்கிறார். அவர் இயக்கிய ஜக்ஷன், புல் தி ட்ரிக்கர் ஆகிய குறும்படங்கள் யூடியூபில் உள்ளது.23 வயதாகும் விஜய் மகன் ஜேசன் சஞ்சய்யை ஹீரோவாக நடிக்க வைக்க வேண்டும் என சில முன்னணி இயக்குநர்கள் காத்திருந்த நிலையில்,அவரோ தனது தாத்தா எஸ்.ஏ.சி வழியில் இயக்குநராகியுளார்.