அம்பிகாபதி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், ஸ்டாலின்.வி. இயக்கத்தில் உருவான படம் “ஃ “.(அக்) .
கர்மா ஒரு போதும் மன்னிக்காது என்ற டேக் லைன் ஐ வைத்து உருவான ஒரு கிரைம் திரில்லர், ஹாரர் திரைப்படம் இது.
இப்படத்தின் ஆரம்ப காட்சியே கதாநாயகி மரணம் அடைந்த நிலையில் இருக்கிறார். அதை தொடர்ந்து வரிசையாக தொடர்ந்து 5 கொலைகள் நடக்கிறது…
ஒரு புறம் ஹீரோ, மறு புறம் போலீஸ் குற்றவாளியை கண்டுபிடிக்க முழு முயற்சி மேற்கொண்டு தேடுகின்றனர். ஒரு கட்டத்தில் போலிசுக்கு ஹீரோ மேல் சந்தேகம் வர, அவர் தான் குற்றவாளி என்று முடிவு செய்கிறது…
இந்த பழியை ஹீரோ பொய் என்று நிரூபித்து உணமையான குற்றவாளி யார் என்று கண்டு பிடித்தரா, இல்லை போலீஸ் கண்டுபிடித்ததா என்று சஸ்பென்ஸ் திரில்லராக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது…
இறுதியில் யாரும் எதிர் பாக்காத வகையில் படம் கிரைம் திரில்லரில் இருந்து , ஹாரராக மாறி ” கர்மவை” நிறைவு செய்கிறது.
கதாநாயகனாக பிரஜின் கதாநாயகியாக காயத்ரி ரெமா இதில் நடித்துள்ளனர்… இன்னொரு கதாநாயகனாக பருத்திவீரன் வெங்கடேஷ் நடித்துள்ளார்… மேலும் Kpy சரத், Kpy வினோத், ஏழாம் அறிவு இராமநாதன், தயாளன் ஆகியோர் முக்கிய கதா பாத்திரம் ஏற்றுள்ளனர்.
இப்படத்தின் இயக்குனர் ஸ்டாலின் வில்லன் கதா பாத்திரம் ஏற்று நடித்துள்ளார்…
தேவசூர்யா ஒளிபதிவில், சதீஸ் செல்வம் இசை அமைப்பில், அரவிந்தன் ஆறுமுகம் எடிட்டிங் கவனிக்க, ஆக்ஷன் பிரகாஷ் சண்டை பயிற்சியில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் தேனியில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது…