பதான் படத்தை தொடர்ந்து ஷாருக்கான் அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜவான்’. படத்தில் நடித்துள்ளார்.இவருடன் விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோன் யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர் அனிரூத் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று தாம்பரத்தில் உள்ள சாய்ராம் கல்லூரியில் நடந்தது. இவ்விழாவில்
இப்படம் செப்டம்பர் 7ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையோட்டி இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் கலந்து கொண்ட ஷாருக் கான், அனிருத், விஜய் சேதுபதி, யோகி பாபுவை பாராட்டி பேசினார்..இசையமைப்பாளர் அனிருத்துடன் மற்றும் பிரியாமணி ஆகியோருடன் சேர்ந்து உற்சாகமாக நடனம் ஆடி அரங்கத்தையே அதிரவைத்தார் தொடர்ந்து மேடையில் பேசிய ஷாருக்கான், “நான் என் வாழ்க்கையில் இது வரை தமிழ்நாட்டில் என் படத்திற்கான நிகழ்ச்சியை நடத்தியது இல்லை. ‘ஹே ராம்’ திரைப்படத்தில் நானாக தமிழ் பேசியிருந்தேன். விஜய் சேதுபதியிடமிருந்து நான் நிறைய கற்றுகொண்டேன். விஜய் சேதுபதி நீங்கள் என்னை பழிவாங்கலாம்;ஆனால், எனது பெண் ரசிகர்களை என்னிடமிருந்து எடுத்துக்கொள்ள முடியாது. அனிருத் என் மகன் மாதிரி. அவர் இசையமைத்த ஒய் திஸ் கொலைவெறி பாடலிலிருந்து அனிருத்தை எனக்கு மிகவும் பிடிக்கும். ஒரு இந்தி, ஒரு தமிழ் பாடலுக்கு மட்டும் அனிருத்தை இசையமைக்க வைக்கலாமா என அட்லீ கேட்டார். ஏன் ஒரு பாடலுக்கு மட்டும், மொத்தப் படத்துக்கும் அவரே இசையமைக்கட்டுமே என்று சொன்னேன்..” .நான் தமிழ்ல அட்லீயை ‘மரண மாஸ்’ என்றுதான் வாழ்த்த முடியும்.
நான் விஜய், ரஜினி மாதிரியோ, அட்லி மாதிரியோ நடனமாட மாட்டேன். நான் ஷோபி மாஸ்டரிடம் எனக்கு கடினமான ஸ்டெப்பை கொடுக்காதீர்கள் என்றேன். காரணம் நான் விஜய் மாதிரி நடனமாட மாட்டேன் என்றேன். ஆனால் என்னை மிக அருமையாக நடனமாட வைத்துவிட்டார். ஒரு பாடல் காட்சியில் எனக்கு அவர் சொல்லி கொடுத்த மூவ்மெண்ட்டால் 2 நாட்கள் எனக்கு கடும் கால்வலி ‘ தமிழ்நாட்டின் உணவு சுவையாகவும்,காரமாகவும் இருந்தது.இவ்வாறு அவர் பேசினார்
முன்னதாக பேசிய விஜய் சேதுபதி, “நான் சிறுவயதிலிருந்தே ஒரு சேட்டு பெண்ணை காதலித்தேன். அவர் ஷாருக்கானை விரும்புவதாக கூறிவிட்டார். அப்போதிலிருந்தே ஷாருக்கானை பழிவாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். அதற்கு இத்தனை நாட்கள் ஆகிவிட்டது. அவர் என்னை நல்ல நடிகர் என சொன்னபோது ஷாக் ஆகிவிட்டேன்” என நகைச்சுவையாக பேசினார்.
இயக்குனர் அட்லீ பேசுகையில்,, ‘ஜவான்’ படம் உருவாக முக்கிய காரணம் என்னோட அண்ணன், என்னோட தளபதி, விஜய் சார்தான். என்ன பண்ணுவன்னு தெரியாது இந்த படம் நீ பண்ணனும் னு விஜய் அண்ணா சொன்னாரு. சங்கர் சாரிடம் உதவி இயக்குனராக இருந்த காலக்கட்டத்தில் எந்திரன் படத்தோட படப்பிடிப்பு மும்பையில் ஷாருக்கான் சார் வீட்டு தெருவில் நடந்தது அப்பா என்னோட சீனியர் ஒருவர் ஷாருக்கான் சார் வீட்டு கதவு கிட்ட நிக்க வச்சு போட்டோ எடுத்தார்.ஆச்சரியமா இருக்கு
பல வருடங்கள் கழித்து மீண்டும் எனக்காக அதே கதவு திறந்துச்சு. வெல்கம் அட்லி சார்னு என்னைய ஷாருக் சார் வெல்கம் பண்ணினாரு. நான் 6 மாசத்துல படம் பண்ணி, 7-வது மாசம் ரிலீஸ் பண்ணிடுவேன். இது எல்லாமே தளபதியாலதான். இந்த படம் நடக்கும் போது கோவிட் வந்துருச்சு. நம்ம தளபதியோட பேன், சொன்ன சொல்ல காப்பாத்தணும். 4 வருஷம் இந்த படத்துக்காக உழைத்து இருக்கிறேன் கதாநாயகி யார் என்று வரும்போது எனது டார்லிங் நயன்தாரா வந்தார்.
இப்போது கேரளாவில் இருப்பதால் அவரால் இந்த நிகழ்ச்சிக்கு வர முடியவில்லை.”இவ்வாறு அவர் பேசினார் விழாவில் தனக்கு ஏற்பட்ட எதிர்ப்புகளை எப்படி எதிர் கொண்டார் என்பதை ஒரு அழகான குட்டி கதையையம் கூறினார்.