
இந்தியா கூட்டணி கட்சிகளின் இரண்டு நாள் கூட்டம் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வியாழன் வெள்ளி ஆகிய இரு தினங்கள் நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை 9:40 மணிக்கு விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் டெல்லி புறப்பட்டு சென்றார். முதலமைச்சருடன், திமுக பாராளுமன்ற குழு தலைவர் டி ஆர் பாலு எம் பி, சென்றுள்ளார். இரண்டு நாள் கூட்டங்களில் கலந்து கொள்ளும் முதலமைச்சர் ஸ்டாலின், நாளை வெள்ளி இரவு 10 மணிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் மும்பையில் இருந்து சென்னை திரும்புகிறார்.
முன்னதாக மும்பை செல்வதற்காக சென்னை பழைய விமான நிலையம் வந்த முதலமைச்சர் ஸ்டாலினை, தமிழ்நாடு அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மற்றும் கட்சியின் பிரமுகர்கள் வழி அனுப்பி வைத்தனர்.
இந்தியா கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, விசிகே தலைவர் திருமாவளவன் எம்பி ,நேற்று இரவு 8:30 மணிக்கு விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், சென்னையில் இருந்து மும்பை புறப்பட்டு சென்றார். இந்தக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள வைகோ உட்பட மற்ற கூட்டணி கட்சிகளின் தலைவர்களும்
மும்பை செல்கின்றனர்.