லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாக உள்ள விடா முயற்சி கைவிடப்படவில்லை நிச்சயம் உருவாகும் என்று சமீபத்தில் லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் அறிவித்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நிலையில், இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது மும்முரமாக நடந்து வருவதாகவும் விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதில், அர்ஜுன் தாஸ் வில்லனாக நடிக்க போகிறார் என்று கூறப்பட்ட நிலையில், இன்னொரு சர்பிரைஸாக இப்படத்தின் படத்தின் மெயின் வில்லன் சஞ்சய் தத் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது குறித்து நடந்து வந்த பேச்சு வார்த்தை சுமூகமாக முடிந்துள்ளதாகவும் விரைவில் இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் குறித்து அதிகார பூராவ் அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்கிறார்கள்.