நடிகர் விஜயின் மகன் ஹீரோவாக அறிமுகமாவார் என பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில்,அவரோ அதிரடியாக தாத்தா எஸ்.ஏ.சி வழியில் இயக்குனராக களமிறங்கியுள்ளார் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்தின் நடிகர் நடிகைகள் தேர்வு செய்யும் பனி தற்போது மும்முரமாக ஆனால் மிக ரகசியமாக நடந்து வருகிறது. முதலில் இப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில்,இந்தப் படத்தின் ஹீரோவாக துருவ் விக்ரம் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் அதேபோல்,இப்படத்தின் இசையமைப்பாளராக ஏஆர் ரஹ்மானின் மகன் அமீன் அறிமுகமாகலாம் என்றும் கூறப்படுகிறது. ஏஆர் அமீன், துருவ் விக்ரம், ஜேசன் சஞ்சய்,இயக்குனர் ஷங்கரின் மகன்ஆகிய நால்வரும் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் நாயகி தேர்வு பட்டியலில் வனிதாவின் மகள் , தேவயானியின் மகள் இனியா,இயக்குனர் ஷங்கரின் வாரிசு,அதிதி,பாலிவுட் ‘லிட்டில் ஏஞ்சல்’ மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் வாரிசு ஜான்வி ஆகியோரது பெயர்களும் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இது முழுக்க முழுக்க வாரிசுகளின் படமாக தாறு மாறாக இருக்கும் என்கிறது தயாரிப்பு வட்டாரம்.