பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி தயாரிப்பில் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் நடித்த ’பார்க்கிங்’ திரைப்படம் செப்டம்பர் 28, 2023 அன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது!*
‘பலூன்’ படத்தில் கே.எஸ்.சினிஷிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ராம்குமார் பாலகிருஷ்ணன் இந்தப் படத்தை இயக்கி உள்ளார்.
இந்த திரைப்படத்தில் இந்துஜா கதாநாயகியாக நடித்துள்ளார். எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர்.
சரியான திட்டமிடல் மற்றும் சரியான செயலாக்கம் என குறுகிய காலத்தில் முழு படப்பிடிப்பையும் படக்குழு முடித்துள்ளது.‘பார்க்கிங்’ படத்தில் சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார் மற்றும் ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்துள்ளார்.