நடிகர் விஜய் விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில்,அடுத்த கட்டமாக, விஜய் மக்கள் இயக்கத்தின் பல்வேறு அணிகளின் நிர்வாகிகளை தொடர்ந்து சந்தித்து வருகிறார். சமீபத்தில் வழக்கறிஞர் அணி மற்றும் தொழில்நுட்ப அணியினருடனான சந்திப்பு நடந்தது.
இதன் தொடர்ச்சியாக இன்று காலை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில்,மகளிரணி தலைவிகள், மகளிர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது . பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து விஜய் மக்கள் இயக்க மாவட்ட மகளிரணி தலைவிகள், மகளிர் அணி நிர்வாகிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்
.தமிழக அரசியலில் நடிகர் விஜய் ஈடுபடவுள்ளது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில்,இன்று சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் விஜய் மக்கள் இயக்கத்தின் மகளிர் அணி ஆலோசனைக் கூட்டம் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து விஜய் மக்கள் இயக்கத்தின் மகளிர் அணி பொறுப்பாளர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தொகுதி வாரியாக மகளிர் அணி நிர்வாகிகளை நியமிப்பது பற்றியும், மகளிர் அணியை சிறப்பாக கட்டமைக்க உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அக்கூட்டத்தில் பேசிய புஸ்ஸி ஆனந்த், “மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து மகளிரணி தலைவிகள் செயல்பட வேண்டும். இங்கிருப்போர் தளபதியைப் பார்க்க வந்திருப்பதாகக் கூறினார்கள். தளபதி ஊரில் இல்லை என்று கூறிதான் ஆலோசனைக் கூட்டத்திற்கு உங்களை அழைத்து வந்தனர்” என்று கூறிய அவர் இந்த மாதம் ‘லியோ’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்க இருப்பதையும் உறுதி செய்திருக்கிறார்.
முன்னதாக மகளிர் அணிகளை சேர்ந்த நிர்வாகிகளிடம் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மகளிர்களுக்கு இனிப்பு வழங்கினார். இக்கூட்டத்தில் பங்கேற்றவர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.