தொடையழகி என்று அழைக்கப்பட்ட நடிகை ரம்பா திரையுலகிற்கு வந்து 17 ஆண்டுகள் கழித்து, கனடாவை சேர்ந்த தொழில் அதிபர் இந்திரன் பத்மநாதனை கடந்த 2010ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8ம் தேதி திருப்பதியில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.கனடாவில் செட்டிலான ரம்பா படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். ரம்பாவுக்கு லான்யா, சாஷா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் அவருக்கும், கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, நடிகை ரம்பா, விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.நடிகைகளின் அடுத்தடுத்த தொடர் விவாகரத்தால் பரபரப்பில் ஆழ்ந்துள்ளது கோடம்பாக்கம்.












