செம்மரக்கடத்தலை மையமாக வைத்துப் பின்னப்பட்ட கதை.
நிகழ்வுகள் நிஜமாக அமைந்ததற்கு நடிகர்கள் ,நடிகைகளின் உழைப்பு முக்கிய காரணம்.
தயாரிப்பாளர் பார்த்த சாரதியை பாராட்ட வேண்டும். அபார துணிச்சல் .
கதையின் நாயகன் வெற்றி. நாயகியாக தியா மயூரி . வில்லனாக ராம். கே. ஜி. எப் . புகழ் . மற்றும் எம். எஸ். பாஸ்கர்,கணேஷ் வெங்கட்ராம் ,மாரிமுத்து வினோத் சாகர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
குரு ராமானுஜம் இயக்கியிருக்கிறார். சத்ய சிவாவின் சீடர்.
நாட்டு நடப்புகளை மையமாக வைத்துப் பின்னப்படும் சோகங்களுக்கு மக்கள் ஆதரவு கிடைக்கும் என்கிற நம்பிக்கை தயாரிப்பாளர்களுக்கு இருக்கிறது. அதன் விளைவாக வந்ததுதான் ‘ரெட் சான்டல் ‘. ஆந்திரத்தின் திருப்பதி மலை செம்மரங்களின் செல்வச் செழிப்பு உலக அளவில் ! வயாகரா தயாரிப்பு உள்ளிட்ட பல மருத்துவம் செம்மரத்தில் புதைந்து இருக்கிறது. இந்த மரக்கட்டைகளை கடத்தினார்கள் என சொல்லி தமிழர்கள் 25 பேரை சுட்டுக் கொன்றார்கள் . அந்த துயர நிகழ்வைத் தான் நினைவு படுத்தியிருக்கிறார்கள்.
வெற்றி ஒரு குத்துச் சண்டை வீரர்.இவரின் நண்பன் கபாலி பட விஷ்வ நாத் . ஆந்திரத்தின் எல்லைப்பகுதி கிராமத்தில் இருக்கும் மாமன் வீட்டுக்கு சென்றவன் பணம் அதிகம் கிடைக்கும் என நம்பி திருப்பதி மலைக்காட்டுக்கு போகிறான். சென்றவர் மீண்டாரா ,மாண்டாரா ,என்ன நடந்தது என்பதை துயரம் சுமந்து சொல்லியிருக்கிறார்கள்.
நடிப்பில் நாயகனை விட எம். எஸ். பாஸ்கர் முதலிடத்தில் !இவரது குடும்பச் சூழல் சோகத்தில் பின்னப்பட்டிருக்கிறது . படம் முடிந்து வெகுநேரம் அவரது தாக்கம் நம்மிடம் .!
நாயகன் வெற்றிக்கு துணையாக காட்சிகள் அமைந்து விட்டன .சண்டை காட்சிகள் இயல்புடன் இருக்கிறது. சில காட்சிகளே என்றாலும் நாயகி மயூரி கச்சிதம் !விஷ்வ நாத்தின் பணத்தாசை அவரை எத்தகைய ஆபத்தில் சிக்க வைத்திருக்கிறது என்பதை மெய்யுருக உணர்த்தி இருக்கிறார். சபாஷ்.!
கே. ஜி. எப் . ராம் மிரட்டலின் மறு உருவம். லோக்கல் போலீஸ் துணையுடன் அவர் செய்கிற அராஜகம் நம்மை பயமுறுத்துகிறது.ஆனால் எல்லா படங்களிலும் ஒரே மாதிரியான தோற்றம்
ஒளிப்பதிவாளர் சுரேஷ் பாலா ,. ஒலிப்பதிவாளர் ரசூல் பூக்குட்டி கதைக்கு ரத்தமும் சதையுமாக உதவி செய்திருக்கிறார்கள்.
கதை ஆசிரியர் இயக்குநர் குரு ராமானுஜம் மக்களுக்கு முக்கியமான தகவலை தந்திருக்கிறார். எந்த மாநிலத்துக்கு வேலைக்கு போனாலும் பக்கத்தில் இருக்கிற போலீஸ் நிலையத்தில் பதிவு செய்து விடுங்கள் . இதற்காக சிவில் இன்பர்மேசன் ரிப்போர்ட் என்கிற பதிவு ஏடு இருக்கிறது.உயிருக்கும் உடமைக்கும் காவல் துறை உத்திரவாதம் அளிக்கும்.
படம் பார்க்கலாம்.!
–தேவி மணி