சூர்யா – ஹரி கூட்டணியில் வெளிவந்த சிங்கம், சிங்கம் 2 படத்தைத் தொடர்ந்து, அதன் மூன்றாம் பாகமான எஸ்-3 என்ற பெயரில் உருவாகி வந்தது, தற்போது இப்படத்திற்கு சி’3′ என படத்தலைப்பு மாற்றப்பட்டுள்ளது . இப்படத்தில் சூர்யா, ஸ்ருதிஹாசன், அனுஷ்கா ஷெட்டி, விவேக், சூரி, ராதிகா சரத்குமார், ராதாரவி, நாசர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.வருகிற டிசம்பர் 16-ந் தேதி இப்படத்தை வெளியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஞானவேல்ராஜா கூறியதாவது,’ சிங்கம் படத்தின் முதல் இரண்டு பாகங்களை விட சி ‘3’ படம் படு விறுவிறுப்பாக வந்துள்ளது. கதை ஆந்திராவில் தொடங்கி, ஆஸ்திரேலியாவில் நடக்கிறது.ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் 5 பாடல்கள் மிக பிரமாதமாக வந்துள்ளன.அறிமுக பாடல் காட்சியில் நீது சந்திரா செம குத்தாட்டம் போட்டுள்ளார். அனூப்சிங் தாகூர் மெயின் வில்லனாகவும்,சரத் சக்சேனா இன்னொரு வில்லனாகவும் நடித்துள்ளனர்இப்படப்பிடிப்பு தற்போது முற்றிலும் நிறைவடைந்துள்ளது. வரும் டிசம்பர் 16-ந்தேதிஇப்படத்தை திரைக்கு கொண்டு வரவுள்ளோம் என்று கூறினார்.