யார் இந்த மார்க் ஆண்டனி?
சீஸர் காலத்து ஆளா ? இல்லை.!
பாட்ஷாவில் மார்க் ஆண்டனியாக நடித்துப் பட்டையை கிளப்பிய ரகுவரனின் பாதிப்பில் கிளம்பியவனா ? கதை என்ன?
இல்லீங்க . டைம் கால் போன் ரகசியம் தெரிந்த விஷால் அண்ட் எஸ். ஜே . சூர்யா இருவரும் பட்டையை கிளப்பியிருக்கிற நிகழ் காலம் டூ கடந்த காலம் பயணிக்கிற பக்கா காமெடி கதை. பல்க்கா பைட்களும் இருக்கிறது.
சரி கதைக்குள்ள போவோம்.
நிகழ் காலத்திலிருந்து கடந்த காலத்துக்கு போன் வழியாக தொடர்பு கொண்டு பேச முடியும் என்கிற டைம் கால் தொலைபேசியை விஞ்ஞானி செல்வராகவன் கண்டு பிடிக்கிறார். இதை வைத்து மனைவியை அவளது விருப்பபடி ஆசிரியையாக மாற்ற முடிகிறது. கால் ஊனம் கூட சரியாகிறது. விஞ்ஞானி என்றால் அடையாளம் தெரியாத அளவுக்கு தாடி ,கண்ணாடி வகையறா இருப்பதால் செல்வராகவனை அடியாளம் காண்பது சற்றே கடினம் .
சாதனையாளரான அவர் கொல்லப்படுகிறார். இவரது ‘டைம் கால் போன்’ கார் மெக்கானிக் விஷாலுக்கு கிடைக்கிறது.அப்பாவுக்கு ஆதரவாக இருந்த வக்கீல் நிழல்கள் ரவியை சாகாமல் காப்பாற்றுகிறார் கடந்த காலத்தில்.!நன்றிக்கடனாக அந்த வக்கீல் விஷாலின் அப்பாவின் நேர்மையை எடுத்து சொல்லுகிறார். அதுநாள் வரை இருந்த அப்பாவைப் பற்றிய தப்பான எண்ணம் அகன்று ,அனைத்துக்கும் காரணம் எஸ். ஏ . சூர்யாதான் என்பது தெரிகிறது.
கொஞ்சம் கிர்ர்னு கிறக்கம் வருவதே இதற்கு பிறகுதான்.!
விஷாலின் அப்பாவாக விஷால் ,எஸ். ஜே. சூர்யாவின் மகன் சூர்யாவாக வருகிறார்கள். வயதான விஷால் ,சூர்யா இருவருமே நல்ல நண்பர்கள் . அவர்களின் பிள்ளைகளும் அப்படியே!அதனால் வில்லங்கம் ஸ்டார்ட்.
மெக்கானிக் மகன் விஷால் ரவுடியாகி ,ரவுடியாக இருந்த சூர்யா மெக்கானிக்காகி கதை பயணிக்கிறது। சூர்யா போனை லவட்டிக்கொண்டு போகிறார் ,இப்படியாக போகிறது கதை
அப்பா ,மகனாக விஷால் . மொழுக்கட்டின்னு மீசை தாடி இல்லாத அப்பாவியாகவும், ரக்கடாக வரும் இன்னொரு ரவுடியும் சூப்பர். இன்னொரு மொட்டை விஷால் சூப்பர். அனகோண்டா துப்பாக்கி ரகளை. மாஸ்.!
எஸ். ஏ . சூர்யா எப்படி?
இவருக்கு ஆட்ட களத்தை ஏக்கரா அளவுக்கு கொடுத்திருக்கிறார் விஷால். நல்ல மனசு. இதற்காகவே பாராட்டலாம் .
தனக்களித்த இடத்தில் எஸ். ஜே. சூர்யா அமெரிக்க சிறுத்தையாக பாய்ந்திருக்கிறார்.சுழற் காற்றாக வசனம் சுத்தி அடிக்கிறது. மாடுலேசன் அசத்தல். சிலுக்கு ஸ்மிதாவைப் பார்த்ததும் பஸ்சுக்குள் போடும் குத்தாட்டம் செம. உண்மையிலேயே இவர் நடிப்பு அரக்கன் தான்.
நாயகி ரிது வர்மா . வில்லன் சுனில். காமடியன் ரெடின் கிங்ஸ் லி பக்க மேளங்கள் .! ஒய் . ஜி. மகேந்திரா தொங்கு சதை.!
முதல் பாதியில் கோட்டை விட்டவர்கள் இடைவேளைக்குப் பிறகு ஓடி ஓடி உழைத்திருக்கிறார்கள் .
இயக்குநர் ஆதிக் ரவிசந்திரனுக்கு வெற்றி கிடைத்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் அபினந்தன் ராமானுஜம்,இசை அமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் இருவருக்கும் வாழ்த்துகள் .
மார்க் ஆண்டனி –கமர்ஷியல் பிரமாண்டம்.!