பட்ட காலிலேயே படம்,கெட்ட குடியே கெடும் என்பது பாமர மக்கள் மத்தியில் வழங்கும் வாய் மொழி..
இது நடிகர் ,இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனிக்கும் பொருந்தும்.
படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்றிருந்த போது ஆழ் கடல் நடிகர் விஜய் ஆண்டனியை சுருட்டிக் கொல்ல பார்த்தது. ஆண்டவன் அருளால் தப்பி தாய் நாடு வந்தார் .
அந்த வடு மறைந்து வந்த நேரத்தில் மகள் தற்கொலை செய்திருப்பது பெரும் சோகம்.
விஜய் ஆண்டனி, மனைவி பாத்திமா மகள்கள் மீரா,லாரா ஆகியோருடன் சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் வாழ்ந்து வருகிறார்.
மூத்த மகள் மீரா, சர்ச் பார்க் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்புக் படித்துகொண்டிருந்தார் .
இவர் நேற்றிரவு தற்கொலை செய்துகொண்டுவிட்டார் . மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகச் சொல்லப்படுகிறது.அதற்காக சிகிச்சை பெற்று வந்ததாக சொல்கிறார்கள்.
அதிகாலை 3 மணி அளவில் அவரது தந்தை படுக்கை அறையில் துப்பட்டாவால் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதை வீட்டின் பணியாளர் பார்த்து அலறியதாக சொல்கிறார்கள். விஜய் ஆண்டனி வீட்டில் அப்போது இல்லை
காவேரி மருத்துவமனைக்கு அவர் கொண்டு சொல்லப்பட்டிருக்கிறார். அங்கு, மீரா முன்னதாகவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தற்கொலை செய்வது பற்றி பொதுவாக விஜய் ஆண்டனி முன்னர் சொன்ன கருத்துகளை சிலர் நினைவு கூர்ந்து வருகிறார்கள்.
“தற்கொலை என்பது தவறான முடிவு . தேர்வின் போது அல்லது நேசிக்கப்பட்டவர் முரண்படும் போது தற்கொலை நிகழ்கிறது. இதற்கு இடம் கொடாத வகையில் பெற்றவர்கள் பிள்ளைகளுடன் நடந்து கொள்ள வேண்டும்.
” தற்கொலைக்கு தூண்டுபவர்களை உடனடியாக தண்டிக்க வேண்டும். குற்றவாளியை ரயிலில் இருந்து தள்ளி கொன்று விடுங்கள்” என்பதாக விஜய் ஆண்டனி முன்னர் ஒரு கொலை நிகழ்வின் போது சொல்லியிருந்தார்.ஒரு மாணவியை ஒருவன் ரயிலில் இருந்து படுகொலை செய்து விட்டான் . இந்த சம்பவம் அவரை வெகுவாகவே உலுக்கி விட்டது.