நடிகை நயன்தாராவின் கணவரும், இயக்குனருமான விக்னேஷ் சிவன் தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் இணைந்த நயன்தாரா கணவருக்கு நெகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: இந்த சிறப்பான நாளில் உங்களைப் பற்றி நிறைய சொல்ல வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால் நான் எழுத தொடங்கினால் சில விஷயங்களை என்னால் நிறுத்த முடியாது என்று நினைக்கிறேன்.
என் மீது நீங்கள் பொழிந்த அன்புக்கு நான் மிகவும் நன்றியுடன் இருப்பேன். நம் உறவுக்கு நீங்கள் வைத்திருக்கும் மரியாதைக்கு நான் மிகவும் நன்றியை கூறிக்கொள்கிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக எனக்கு நீங்கள் இருக்கிறீர்கள். உங்களை போல் யாரும் எனக்கு இல்லை.என் வாழ்க்கையில் வந்து, அதை கனவாகவும் அர்த்தமுள்ளதாகவும் அழகாகவும் மாற்றியதற்கு நன்றி. நீங்கள் அனைத்திலும் சிறந்தவர்.
என் இதயம் மற்றும் ஆன்மாவுடன் இருக்கும் என் உயிர் நீங்கள் தான். வாழ்க்கையில் எல்லாவற்றிலும் சிறந்ததாக உங்களை நான் கருதுகிறேன்.நம்முடைய ஒவ்வொரு கணமும் நலமாகட்டும், கடவுள் உலகில் உள்ள அனைவருக்கும் மகிழ்ச்சியை தந்து ஆசீர்வாதம் செய்வாராக.. என்று பதிவு செய்துள்ளார். நயன்தாராவின் இந்த எமோஷனல் பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.