மலையாளத்தில் 40-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளவர் அனில்.இவர் தற்போது ’சாயாவனம்’ படத்தின் மூலம் தமிழிலும் இயக்குனராக கால் பதிக்கிறார். இபடத்தில்,’கடைக்குட்டி சிங்கம்’, ‘தர்மதுரை’, ‘சுந்தர பாண்டியன்’ உள்ளிட்ட படங்களில் நடித்த சௌந்தரராஜா கதாநாயகனாக நடிக்கிறார். பிரபல மலையாள நடிகை தேவானந்தா கதையின் நாயகியாக அறிமுகமாகிறார்.இவர்களுடன், அப்புக்குட்டி, ஜானகி உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
எல். ராமச்சந்திரன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு போலி வர்கீஸ் இசையமைக்கிறார். இப்படத்தை தாமோர் சினிமா சார்பில் சந்தோஷ் தாமோதரன் தயாரிக்கிறார்.
இப்படம் குறித்து இயக்குநர் அனில் கூறுகையில், ’’இந்தப் படம், தேவானந்தா நடிக்கும் சீதை கதாபாத்திரத்தைச் சுற்றி நகரும் கதையை கொண்டது. படத்தின் பெரும்பகுதி சிரபுஞ்சியில் கடும் சிரமங்களுக்கு இடையே படமாக்கப்பட்டிருக்கிறது. அடர்ந்த காட்டுப்பகுதியில் உள்ள சிறிய மலை கிராமத்தில் நடக்கும் கதை,
அடிப்படை வசதியே இல்லாத அந்த கிராமத்தில் பாம்பு கடிக்கு வைத்தியம் பார்த்து பிழைப்பு நடத்தும் பெண்மணியின் தூரத்து உறவினர் மகன் முத்து என்ற இளைஞன் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு அங்கு அழைத்து வருகிறான்.
முதல் நாள் இரவு கொண்டாடிய அடுத்த நாள் சில நிர்ப்பந்தம் காரணமாக வேலைக்காக அந்த இளம்மனைவியை அங்கு விட்டுவிட்டு செல்கிறான். அந்த பெண்னிடம், இந்த மலை பகுதியில் விலங்குகளால் நமக்கு எந்த அச்சறுத்தலும் இல்லை ஆனால் கீழேயிருந்து வரும் மனிதர்களை கண்டு தான் இங்கு பயப்பட வேண்டும் கவனமாக இருந்து கொள் என்கிறார்அந்தபெண் வைத்தியர்.
இந்நிலையில் கணவன் வேலைக்கு சென்று விட தனிமையில் தவிக்கும் அந்தப் பெண் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பெரும் அச்சறுத்தலுக்கு ஆளாகிறார். இதற்கிடையே வேலைக்கு போன கணவன் 3 வருடங்கள் கழித்து மீண்டும் வீடு திரும்புகிறான் . தனக்கு நேரும் அச்சறுத்தல்களை அந்த பெண் எப்படி எதிர் கொள்கிறாள்,அவளுக்கு என்ன நேர்கிறது.3 வருடங்கள் கழித்து வீடு திரும்பும் கணவனின் நிலைப்பாடு என்ன ? என்பது தான் இப்படத்தின் விறுவிறுப்பான திரில்லர் கதையாக்கப்பட்டுள்ளது.
முழுக்க முழுக்க மூடுபனி, மழை மற்றும் காடுகளின் பின்னணியில் படமாக்கப்பட்ட முதல் தமிழ்ப் படம் இது என்று நம்புகிறேன். படத்தில் வரும் கதாபாத்திரங்களின் மனநிலையைப் பிரதிபலிக்கும் விதமாக, இயற்கை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கதாபாத்திரங்கள், காடுகளைப் போல அடர்த்தியானவை” என்கிறார்.