நடிகர் விக்ரம், ரிது வர்மா, சிம்ரன், ராதிகா, பார்த்திபன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘துருவ நட்சத்திரம்’. .
கவுதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2017ம் ஆண்டில் தொடங்கப்பட்டு, சில பிரச்சினைகள் காரணமாக கிடப்பில் போடப்பட்ட நிலையில்,பிரச்சனைகள் பேசி தீர்க்கப்பட்டு, கடந்த ஆண்டில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சில மாற்றங்களோடு தொடங்கப்பட்டு , தற்போது வரும் தீபாவளி ரிலீசாக வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் தற்போது இப்படத்தின் சென்சார் நிறைவடைந்து, U/A சான்றிதழ் கிடைத்துள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை காலை 11 மணியளவில் இந்தப் படம் குறித்த புதிய அறிவிப்பு வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.