மொமென்ட் என்டர்டெயின்மென்ட்ஸ்’பட நிறுவனம் சார்பில் ஜி ஏ ஹரிகிருஷ்ணன் மற்றும் துர்கா தேவி ஹரிகிருஷ்ணன் ஆகியோர் தயாரிப்பில், புதுமுக இயக்குநர் ரெங்கநாதன் இயக்கும் பான்-இந்தியா கதையம்சம் கொண்ட படமொன்றில் இயக்குனர் செல்வராகவன் முதன்மை வேடத்தில் நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் தெலுங்கு நடிகர் ஜே டி சக்கரவர்த்தியும் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவும் நடிக்கின்றனர்.
இவர்களுடன் யோகி பாபு, ‘புஷ்பா’ மற்றும் ‘ஜெயிலர்’ புகழ் சுனில், ராதாரவி மற்றும் வினோதினி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் இயக்குநர் ராஜீவ் மேனனின் மகள் சரஸ்வதி மேனன் நாயகியாக அறிமுகம் ஆகிறார். இன்னொரு நாயகியின் பெயர் பின்னர் அறிவிக்கப்படும் என்கிறது படக்குழு.
இப்படம் குறித்து இயக்குநர் ரங்கநாதன் கூறுகையில், “விறுவிறுப்பான களத்தில் ரசிகர்களை கவரும் வகையில் பல்வேறு அம்சங்களை புகுத்தி உள்ளோம். கதையைக் கேட்ட செல்வராகவன், அதை மிகவும் ரசித்ததோடு முதன்மை வேடத்தில் நடிக்கவும் ஒப்புக்கொண்டார். இவ்வாறு அவர் கூறினார்.
தயாரிப்பாளர் ஹரிகிருஷ்ணன் கூறுகையில், “இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது திண்டுக்கல் அருகில் சுமார் 1000 துணை நடிகர்கள் பங்களிப்போடு நடைபெற்று இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. படப்பிடிப்பு விரைவில் நிறைவடையும் என்கிறார்.