
கூட்டத்தில், கட்சித்தலைவர் நம்மவர் அவர்கள் கலந்துகொண்டு, வரவிருக்கும் 2024 பாராளுமன்ற தேர்தலில் கட்சி போட்டியிடுவதை பற்றி விளக்கி பேசினார். அத்துடன் அதற்கான செயல் திட்டங்கள் பற்றி அறிவுரை வழங்கினார்.
நிகழ்வில், கோவை துப்புரவு பணியாளர்கள் சங்கத்தை சேர்ந்தவர்களும், கோவை மாவட்ட சித்தாபுதூர் அடுக்குமாடி குடியிருப்போர் சங்க நிர்வாகிகளும் தலைவர் நம்மவரை சந்தித்து கோரிக்கை மனுக்கள் கொடுத்தனர்.
கோவை மண்டல நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்ட இக்கூட்டத்தில் துணைத்தலைவர் திரு. R.தங்கவேலு அவர்கள் வரவேற்க, துணைத்தலைவர் திரு. A.G.மௌரியா அவர்கள் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் பொதுச்செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம் அவர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், மண்டல, மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் மய்ய நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
இறுதியாக கோவை மண்டல செயலாளர் திரு. ஆ.ரங்கநாதன் அவர்கள் நன்றி கூறினார்.