ஐ படத்தில் திரு நங்கைகளை கொச்சைப்படுத்தும் விதமாக இயக்குனர் ஷங்கர் படமாக்கியி ருப்பதாக திரு நங்கைகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர் .இந்நிலையில் அப்படத்தில் நடித்த திருநங்கை ஓஜாஸ் அறிக்கை ஒன்றை வெளியி ட்டுள்ளார். அதில் கூறியி ருப்பதாவது, ‘தயவு செய்து கோப ப்பட்டு மூர்க்கமாக நடந்து கொள்ளாதீர்கள். இயக்குனர் சங்கர் ‘ஐ ‘ படத்தில் என் கேரக்டரை இழிவு படுத்த வில்லை. மாறாக, அக்காட்சிகளை மிகவும் அழகான முறையில் காண்பித்துள்ளார்.இது ஒரு காதல் கதை.அதில் என் கேரக்டர் விக்ரமை லவ் பண்ணுவது மாதிரியாக அமைக்கப்பட்டுள்ளது. அந்த காதலை என் கேரக்டர் வெளிபடுத்துவது மாதிரி இருந்தது.திரு நங்கைகளை கஷ்ட படுத்தவோ,அவமான படுத்தவோ ஷங்கர் முயற்சி பண்ணல. அதனால் ( திருநங்கைகளை) உங்களை நான் கெஞ்சி கேட்டு க்கொள்கிறேன் இன்னும் சொல்ல போனால்,சூபர்ப் டைரக்டர் ஷங்கர் மற்றும் பெரிய நடிகர்களுடன் நடித்தை எண்ணி நாம பெருமைபடனும். தற்போது படபிடிப்பிற்காக நான் வெளிநாட்டில் இருக்கிறேன் .இப்பிரச்சனைக்கு இதோடு முற்றுப்புள்ளி வைத்து விட்டு ,இப்படத்தை வெற்றியடைய செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.