விஜய் நடிப்பில்,லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லியோ’ வரும் அக்டோபர் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ‘கைதி’ மற்றும் ‘விக்ரம்’ படங்களைத் தொடர்ந்து சினிமாடிக் யுனிவர்ஸின் ஒரு பகுதியாக (எல்சியு) இந்தப் படம் உருவாகியுள்ளது
இதில் ‘விக்ரம்’ படத்தில் நாயகனாக நடித்த கமல்ஹாசன் , ‘லியோ’ படத்தில் ஒரு சில காட்சிகளில் தோன்றவுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியாகி புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘லியோ’ படத்தில் ஏஜென்ட் விக்ரம் அல்லது அவரது மாற்றுத் ‘தளபதி கர்னல்’ வேடத்தில் நடித்து இருக்கலாம் என்கிறார்கள்.
சமீபத்தில் தனது காட்சிகளுக்கான டப்பிங்கை கமல் முடித்துள்ளார் என்றும், விக்ரமில் அவர் தோன்றிய கெட்டப்பில் அவரது பாகங்களையும் படமாக்கியுள்ளார் என்றும் கூறப்படுகிறது . இருப்பினும், கமல்ஹாசன் இப்படத்தில் நடித்துள்ளது குறித்து படத்தரப்பு இதுவரை வெளியிடவில்லை