Direction : R. S. Durai Senthilkumar
Production : Grass Root Film Company
Starring : Dhanush, Trisha Krishnan, Anupama Parameswaran, Saranya Ponvannan
Music : Santhosh Narayanan
Cinematography : Venkatesh S
Editing : Prakash Mabbu.
RATING;2/5
கருணாஸின் இரட்டை மகன்களாக தனுஷ். அண்ணன் தனுஷ் (கொடி) அப்பாவின் சாவு கண்ணுக்குள்ளேயே நிற்க, அரசியலே தன மூச்சாகக் கொண்டு சாதிக்க நினைக்கிறார்..எதிர்க்கட்சியில் அவருடைய காதலியாக இருக்கும் (ருத்ரா) த்ரிஷா, இருவரும் அரசியலில் பெரிய இடத்தை பிடிக்க வேண்டும் என்பதையே லட்சியமாக கொண்டவர்கள்.. ஒருகட்டத்தில், தனுஷும் த்ரிஷாவும் அவரவர் கட்சியின் எம்.எல்.ஏ. வேட்பாளராக நிறுத்தப்படுகிறார்கள். எப்படியாவது பதவியை அடைந்தே தீருவது என்ற வெறியுடன் நிற்கும் த்ரிஷா , தன் தந்தையின் சாவுக்கு காரணமான அந்த ஊரிலுள்ள பாதரச பாதிப்பு, மீத்தேன் கழிவுகள்,பிரச்சனையை தீர்த்தே ஆகவேண்டும் என்ற லட்சிய வெறியுடன் நிற்கும் தனுஷ் இதில் யாருடைய ஆசை நிறைவேறியது..? என்பதே ‘கொடி’யின் மீதிக்கதை!
கண்ணாடி, தாடி என்றால் கொடி(தனுஷ்-1) ,வேட்டி சட்டை,கிளீன்சேவ்,என்றால் (தனுஷ்-2) அன்பு,இருவருக்கும் பெரிய வித்தியாசம் ஏதுமில்லை.தனுசின் முதல் இரட்டை வேடம் இப்படியா இருக்க வேண்டும்? ஆனாலும் நடிப்பு பரவாயில்லை ரகம் தான்.எஸ்.ஏ.சந்திரசேகர்,சரண்யா பொன்வண்ணன்,காளி வெங்கட் என அனைவருமே அவர்களது கதாப்பாத்திரத்தை உணர்ந்து நடித்து இருக்கிறார்கள். லாஜிக் எல்லை மீறல்களோடும், வழக்கமான கமர்ஷியல் விஷயங்களோடும் தொடங்கும் முதல் 30 நிமிடங்கள் நம் பொறுமையை கடுமையாக சோதித்த பிறகே,நெளிந்தாலும் சீட்டிலேயே நாம் தொடர்ந்து அமர்ந்து இருப்பதால் கதைக்குள் மெல்ல படம் பயணிக்கிறது. அதன்பிறகு சின்னதான சுவாரஸ்ய திருப்பங்களுடன் படம் வேகமெடுத்து முதல் பாதி முடியும் போது நாம் நிமிர்ந்து உட்கார்ந்தால் இடைவேளை !சரி இரண்டாம் பாதி வேற லெவலா இருக்கும் போல, என இருக்கையில் அமர்ந்தால் இரண்டாம்பாதி ஏமாற்றத்தையே தருவதால் ”கொட்டாவி”யோடு நமக்கு ஏகத்துக்கும் அலுப்பு தட்டுகிறது.சந்தோஷ் நாராயணின் ‘ஏய் சுழலி…’ பாடல் கவர்கிறது. பின்னணி இசை பெரிதாக ஒன்றுமில்லை! ஒளிப்பதிவு ஓகே. படம் முழுவதும் ஆங்காங்கே சில சுவாரஸ்யமான காட்சிகளும், சில ‘மாஸ்’ காட்சிகளையும் கொண்டிருந்தாலும், அடுத்து என்ன என்பதை நாம் மிக எளிதாகவே யூகிக்க முடிவதால், உயரமான கம்பத்தில் ‘கொடி’ கட்டப்பட்டிருந்தாலும்,காற்றும் அதற்கு சாதகமாக அடித்தாலும், கட்டப்பட்ட கயிற்றிலேயே கொடி சிக்கிக் கொள்வதால் பட்டொளி வீசி பறக்க முடியாமல் காற்றில் படபடக்கவே செய்கிறது.