பொங்கல் திருநாள் ,தமிழர்களின் திருநாள். 3 நாட்கள் பட்டி தொட்டியெல்லாம் மக்கள் சிறப்புடன் கொண்டாடுவார்கள். முக்கிய நகரங்களில் ஜல்லிக்கட்டு போன்ற வீர விளையாட்டுகளும் நடக்கும்.
குறிப்பாக புதிய திரைப்படங்கள் வெளியாகும்.
சிவகார்த்திகேயனின் ‘அயலான்’பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. செப் 23 தேதி வருவதாக அறிவித்திருக்கிறார்கள். செப்டம்பர் 30 -ல் சுந்தர்சி யின் அரண்மனை 4 படம் 2024 பொங்கல் விழா படமாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது .
ஆகிய இரண்டு படங்கள் வருவதாக முன்னரே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ‘லால் சலாம்’ பொங்கல் ரிலீஸ் என்பதாக அறிவித்திருக்கிறார்கள்.
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து மகள் ஐஸ்வரியா இயக்கியுள்ள படம். லைகா தயாரிப்பு. பெரிய நிறுவனம். வெற்றி படங்களை தந்து கொண்டிருக்கிற நிறுவனம்.
இவர்கள் லால் சலாமை இறக்கினால் மற்ற இரண்டு படங்களின் நிலை என்ன?
தியேட்டர்கள் பாதிக்கும் . வசூலும் கிடைக்காது. இதனால் அயலான் படக்குழுவினர் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். கே. ஜே. ஆர். ஸ்டுடியோஸ் நிர்வாகத் தயாரிப்பாளர் சவுந்தர் ஒரு பதிவு வெளியிட்டிருக்கிறார்.
அந்தப் பதிவு இதோ..!
” 2024 ஆம் ஆண்டு பொங்கலுக்கு லால் சலாம் திரைப்படம் வருகிறது என்று அறிவிப்பு வந்துள்ளது. பொங்கலுக்கு, இரு படங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. திடீரென்று நாங்களும் பொங்கலுக்கு வருவோம் என்று கடையை விரித்தால்,முதலில் அறிவித்த தயாரிப்பாளர்கள் படங்களுக்கு கிடைக்கும் தியேட்டர்கள் நிலைமை என்னவாகும்?.
ஜெயிலர் படம் தனித்த தேதியில் வெளியிட்டு நன்றாக கல்லா கட்டியது.மூன்று மாதத்திற்குள் மற்றொரு திரைப்படமா என அறிவித்த தயாரிப்பாளர்களுக்கு கேள்வியினை எழுப்பத் தோன்றுகிறது.
லியோ போன்ற திரைப்படங்கள், படப்பிடிப்பு ஆரம்பித்த உடனே வெளியீட்டுத் தேதி அறிவித்தார்கள். இதனால் மற்ற தயாரிப்பாளர்களின் படம் வெளியிடுவதில் எந்தச் சிக்கலும் இல்லாமல் வெளியிடப்படுகிறது.
ரஜினிகாந்த் , மற்றும் பெரிய நடிகர்கள் அதன் தயாரிப்பு நிறுவனங்கள் படப்பிடிப்பு ஆரம்பிக்கும நாளிலே வெளியீட்டுத் தேதி அறிவித்தால் தியேட்டர் சிக்கல்கள் இல்லாமல் இருக்கும். தயாரிப்பு சங்கங்கள் இதில் தலையிட்டு நல்ல முடிவுக்கு வருமாறு கேட்டுக் கொள்கிறோம்.”என்று கூறி இருக்கிறார்.
ரஜினிகாந்த் என்ன செய்யப்போகிறார்?