காவல் துறை உங்கள் நண்பன்’பட நாயகன் சுரேஷ் ரவி தற்போது நந்திவர்மன் என்ற புதிய படத்தில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார். இதில் ஆஷா கவுடா கதாநாயகியாக நடித்துள்ளார்.இவர்களுடன் நிழல்கள் ரவி, போஸ் வெங்கட், ஆடுகளம் முருகதாஸ், கஜராஜ், அம்பானி சங்கர், முல்லை கோதண்டம், மீசை ராஜேந்திரன், அசுரன் அப்பு, பொம்மி ராஜன் மற்றும் ஜே.எஸ்.கே.கோபி உள்ளிட்ட நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ளனர்.அருண் குமாரின் ஏகே ஃபிலிம் பேக்டரி தயாரிப்பு நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.
உண்மையான மற்றும் கற்பனைக் கூறுகளை அடிப்படையாகக் கொண்ட இந்த சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தை அறிமுக இயக்குனர் பெருமாள் வரதன் இயக்கியுள்ளார்.பெருமாள் வரதன் மரகத நாணயம், ராட்சசன், புரூஸ் லீ ஆகிய படங்களில் இணை ஒளிப்பதிவாளராகவும், கன்னி மாடம் படத்தின் இணை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.
இப்படம் குறித்து இயக்குனர் பெருமாள் வரதன் கூறுகையி,ல் “பல்லவ வம்சத்தின் பிரபலமான பேரரசர் நந்திவர்மனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட படம். இது ஆனால் இது கற்பனைக்கதை தான்.செஞ்சி அருகே அனுமந்தபுரம் என்ற ஊரில் ஆயிரம் வருடங்களுக்கு முன் நந்தி வர்மன் ஆட்சி காலத்தில் நயவஞ்சகர்களால் நந்தி வர்மன் கொல்லப்பட்டு விடுகிறான் அன்று முதல் அங்கு பல அமானுஷ்ய சம்பவங்கள் நடந்து வருகிறது.கால போக்கில் இப்பகுதி முழுவதும் பழங்கால கோவில் உள்பட பூமிக்குள் புதையுண்டு போய்விடுகிறது ஆனாலும் அந்த ஊரில் அமானுஷ்ய சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.இந்நிலையில்,நந்திவர்