லியோ படத்தை தொடர்ந்து நடிகர் விஜய், அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68 வது படத்தில் நடிக்க உள்ளார். இது குறித்த அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. குறுகிய கால தயாரிப்பாக இந்தப் படம் உருவாகவுள்ள இப்படத்தில் விஜய்,அப்பா மற்றும் மகன் என இரு கேரக்டர்களில் நடிக்கிறார்.
இதற்காக சில வாரங்களுக்கு முன்பு லாஸ் ஏஞ்சல்சில் அவருக்கு நவீன தொழில் நுட்பத்தை பயன் படுத்தி போட்டோ சூட் நடத்தப்பட்டது.இந்நிலையில் இந்தப் படத்தின் பூஜை இன்று காலை சென்னையில் பிரசாத் ஸ்டூடியோவில் நடத்தப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர். தெலுங்கு நடிகை மீனாட்சி சவுத்ரி இந்தப் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது.இவருடன் ஜெய், அபர்ணா தாஸ், பிரபுதேவா, வைபவ், லைலா,ஆகியோரும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது
மேலும் இப்படத்தில் விஜயுடன் ஒரு காலத்தில் இளம் பெண்களின் கனவு நாயகனாக வலம் வந்த நடிகர் ‘மைக்’ மோகன் இணைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.ஏற்கனவே இப்படத்தில் விஜயுடன் இணைந்து நடிகர் பிரசாந்த் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடதக்கது.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பிரம்மாண்டமான பாடல் காட்சியுடன் நாளை முதல் தொடங்கவுள்ளது. பிரபல டான்ஸ் மாஸ்டர் ராஜூ சுந்தரம் இந்தப் பாடலுக்கு நடனம் அமைத்து வருகிறார். தொடர்ந்து வரும் 16ம் தேதி வரை நடைபெறவுள்ளதாகவும் அதையடுத்து அடுத்தக்கட்ட ஷெட்யூல், வெளிநாட்டில் நடக்கவுள்ளதாகவும் படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.