லியோ படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள போஸ்டரில் பனி பிரதேசத்தில் ஹைனா விலங்குடன் விஜய் மோதுவது போன்று காட்சி இடம்பெற்று இருந்தது.
இந்நிலையில்,லியோ படத்தின் கதை இதுதான் என சமூக வலைதளங்களில் உலா வரும் கதை இது தான். என்று பல்வேறு யூகங்கள் சொல்லப்படுகின்றன. அதாவது சஞ்சய் தத், அர்ஜுன், விஜய் ஆகிய மூன்று பேரும் ஒரே கேங்ஸ்டர் குடும்பத்தை சேர்ந்தவர்கள்; அதனை சுற்றி நடக்கும் பிரச்னைதான் கதை என்று ஒரு விஷயமும்;
பாட்ஷா பாணியில் பெரிய கேங்ஸ்டரான விஜய் தனது அடையாளத்தை மறைத்து காஷ்மீரில் வாழ்வார் அவரை எதிரிகள் அழிக்க வரும்போது நடப்பதுதான் கதை என்று ஒரு விஷயமும் கூறப்படுகிறது. இந்நிலையில்,மத்திய திரைப்பட தணிக்கை குழு லியோ படத்துக்கு யூ/ஏ சான்றிதழை கொடுத்திருக்கிறது. இதனை லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளார்.