நடிகர் அஜித் முதல் முறையாக மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். அஜர்பைஜானில் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இப்படத்தில் திரிஷா, ஹுமா குரேஷி, சஞ்சய் தத், அர்ஜுன் என பல நட்சத்திரங்கள் நடிப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகியுள்ள நிலையில், தற்போது இப்படத்திலிருந்து பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி ‘திடீர்’ என விலகி விட்டதாகவும், அவருக்கு பதில் நடிகை ரெஜினா கசாண்ட்ராவை நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்துள்ளதாகவும் அடுத்த இரண்டு நாட்களில் விடாமுயற்சி படப்பிடிப்பில் ரெஜினா கலந்து கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சூதாட்ட செயலி மோசடி வழக்குத் தொடர்பாக நடிகைகள் ஷரத்தா கபூர், ஹுமாகுரேஷி, ஹினாகான் உள்ளிட்டோருக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி உள்ளதே ‘விடா முயற்சி’ படக்குழு ,நமக்கு எதற்கு வம்பு என ஹுமாகுரேஷியை கழற்றி விட காரணம் என்கிறது பாலிவுட் வட்டாரம்