தமிழ் சினிமாவில் கடந்த 2006ஆம் ஆண்டு வெளியான கேடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் தமன்னா. கடந்த 17 ஆண்டுகளாக தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம்வரும் நடிகை தமன்னா. லஸ்ட் ஸ்டோரீஸ் 2 என்னும் படத்தின் மூல ம் மூலம் இந்தி திரையுலகிலும் பிரபலமானார்.
சமீபத்தில் வெளியான ரஜினியின் ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற ‘காவாலா’ பாடலுக்கு தமன்னா போட்ட குத்தாட்டம் அவரை வேற லெவலில் உலக ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்த்துள்ளது.
இந்நிலையில் நடிகை தமன்னாவை ஜப்பானின் ஷிசேடோ என்னும் அழகுசாதன நிறுவனம் அவரை தனது முதல் இந்தியத்தூதராக நியமித்துள்ளது. இது குறித்து தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள தமன்னா கூறுகையில், ‘ . இந்தியாவில் ஷிசேடோ(shiseido) இன் முதல் பிராண்ட் தூதராக இருப்பதில் பெருமை அடைகிறேன். உங்கள் அனைவருக்கும் தெளிவான பளபளப்பான தோலைப் பெற நான் ஷிசேடோவினை பரிந்துரைக்கிறேன். ஷிசேடோவின் ஸ்கின்கேரில் இருக்கும் எடெர்மைன் ஆக்டிவேட்டிங் எஸ்ஸன்ஸ், அல்டிமேட் சீரம், எனர்ஜி கிரீம் ஆகிய மூலக்கூறுகள் என் தோலின் பாரமரிப்பினை மாற்றியமைத்துள்ளது.
புதுமை, தரம் மற்றும் தனித்துவத்தைக் கொண்டாடுவதில் ஷிசேடோவின் அர்ப்பணிப்பு தனிப்பட்ட அளவில் என்னிடம் பிரதிபலிக்கிறது. அதனால்தான் ஷிசேடோவின் ஸ்கீன் கேர் குடும்பத்தில் இணைவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது’ எனத் தெரிவித்துள்ளார்.
இந்த வாய்ப்பு தமன்னா போட்ட ஜெயிலர் பட குத்தாட்டத்தை பார்த்து அந்நிறுவனம் இந்த வாய்ப்பை அவர்க்கு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் நடிகை நயன்தாரா 9ஸ்கின் எனும் அழகு சாதன பிராண்டை ஆரம்பித்துள்ளார்.
இந்த பிராண்டின் அறிமுக நிகழ்ச்சி மலேசியாவில் நடந்தது.அவருக்கு போட்டியாக ஷிசேடோ நிறுவனம் தமன்னாவை களமிறங்கியுள்ளது என்கிறார்கள்.