ஷங்கரின் 2.0 படத்தில் நடித்துக் கொண்டிருந்த ரஜினிகாந்த் திடீரென மருத்துவ பரிசோதனைக்காக கடந்த 10 நாட்களுக்கு முன்பு மகள் ஐஸ்வர்யா தனுசுடன் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்அமெரிக்காவில் தங்கி மருத்துவ பரிசோதனைகள் செய்து கொண்ட ரஜினிகாந்த் சனிக்கிழமை தனது மகளுடன் ஊர் திரும்பினார்.
அதிகாலை 4 மணிக்கு அவர் சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கினார். வீடுதிரும்பிய அவர் தனது குடும்பத்தினருடன் தீபாவளியை உற்சாகமாக கொண்டாடினார் வீட்டின் முன்பு கூடிய ரசிகர்களையும் அவர் சந்தித்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.