நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த மனம் கொத்திப்பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், நம்ம வீட்டுப்பிள்ளை, சீமராஜா என பல படங்களுக்கு இசையமைத்தவர் டி இமான்.நெருங்கிய நண்பர்களாக வலம் வந்த இருவரும் கடந்த சில வருடங்களாகவே இருவரும் பேசிக்கொள்வதில்லை.
இந்நிலையில், சிவகார்த்திகேயன் குறித்து இசையமைப்பாளர் டி இமான் கூறியுள்ளதாவது, சிவகார்த்திகேயன் கடின உழைப்பாளி என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. அவருடைய உழைப்புதான் அவரை இந்த இடத்தில் வைத்து இருக்கிறது. மனம் கொத்தி பறவை படத்தில் ஆரம்பித்த அவருடனான பயணம் பல படங்களில் தொடர்ந்தது.
ஆனால், சிவகார்த்திகேயனுடன் இனி இந்த ஜென்மத்தில் சேர்ந்து பயணிப்பது முடியாது, அது மிகவும் கஷ்டம் சில தனிப்பட்ட காரணம் இருக்கிறது. அவர் எனக்கு செய்த மிகப்பெரிய துரோகம் அதை என்னால் வெளியில் சொல்ல முடியாது. அடுத்த ஜென்மத்தில், நான் ஒரு வேளை இசையமைப்பாளராகவும், அவர் நடிகராகவும் இருந்தால், வாய்ப்பிருக்கிறதா என்று பார்ப்போம்.எனக்கு எப்படி துரோகம் இழைக்க உனக்கு மனது வந்தது என்று சிவகார்த்திகேயனிடம் பலமுறை கேட்டு இருக்கிறேன். அதற்கு அவர் சொன்ன பதிலை நான் இந்த இடத்தில் சொல்ல முடியாது.
பல விஷயங்களை நான் மூடி மறைக்கிறேன் என்றால் அதற்கு காரணம் குழந்தைகளின் எதிர்காலம் தான்.இந்த ஊர் என்னை சரியானவன் என்று சொல்கிறதா? இல்லை தவறானவன் என்று சொல்கிறதா? என்பது பற்றி எல்லாம் எனக்கு கவலை இல்லை. எனக்கு நான் யார் என்று தெரியும் என்னை படைத்தவனுக்கு நான் யார் என்று தெரியும், என் குடும்பத்திற்கும், என் இறைவனுக்கும் நான் சரியாக இருக்கிறேன் என்று தெரிந்தால் போதும். ஆவேசமாக கூறியுள்ளார்.
இமானும் சிவகார்த்திகேயனும் பிரிந்ததற்கு காரணம் டி .இமானின் விவாகரத்து பிரச்சனை தான் என சமூக வலைதளங்களில் பலரும் பட்டி மன்றம் நடத்தி வரும் நிலையில் இது குறித்து டி இமானின் முன்னாள் மனைவி மோனிகா இவ்விவகாரம் குறித்து கூறியுள்ளதாவது,””எங்களுடைய குடும்ப நண்பர் சிவகார்த்திகேயன். அவர் ரொம்பவே நாகரீகமான மனிதர். இமானுக்கும் அவருக்கும் நல்ல நட்பு உண்டு. நண்பர் என்ற முறையில் எங்கள் குடும்பத்தின் மேல் அக்கறையாகவே இருப்பார்.
என்னுடைய மகள்களுக்கும் அவரை பிடிக்கும்.எனக்கும் இமானுக்கும் விவாகரத்து நடக்கக்கூடாது என்று எங்கள் இருவருக்குமிடையே பஞ்சாயத்து செய்து வைக்க வந்தார். நாங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டுமென்று சமாதான முயற்சிகளை எடுத்தார். இமானுடைய விவாகரத்து முடிவுக்கு சிவகார்த்திகேயன் சப்போர்ட் செய்யவே இல்லை. நியாயத்து பக்கம் நின்றார். சிவகார்த்திகேயன் அப்படி செய்தது இமானுக்கு பிடிக்கவில்லை.சிவகார்த்திகேயன் தனக்கு சப்போர்ட் செய்யவில்லை என்பதைத்தான் இமான் துரோகம் என்று சொல்கிறார் என்பது எனக்கு புரிகிறது.
ஆனால் அதை வெளியில் வேறு மாதிரி புரிந்துகொள்கிறார்கள். இதில் பாதிக்கப்பட்டது இப்போது சிவகார்த்திகேயன்தான். இதற்காக நான் வருத்தப்படுகிறேன். சிவகாத்திகேயன் பாவம்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்