சமீபத்தில் விஜய் நடித்த ’லியோ’ படத்தின் டிரைலர் வெளியீடு சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.ஆனால் சில திரையரங்குகளில் விஜய் ரசிகர்கள் திரையரங்கில் இருக்கைகளை அடித்து உடைத்து சேதப்படுத்தியதாக புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களால் வெளியாகி பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில் லியோ திரைப்படம் வரும் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது இப்படத்தின் அதிகாலை 4 மணி காட்சிக்கு நீதி மன்றம் அனுமதி மறுத்து உத்தரவு பிறப்பித்து. இந்நிலையில்,திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்ரமணியன் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது, ’இனி திரையரங்குகளில் படத்தின் டிரைலர்களை வெளியிடப் போவதில்லை. .திரையரங்குகளில் டிரைலர் வெளியிடுவதால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுகிறது,
அதனால் தேவையற்ற சிக்கல்கள் ஏற்படுகிறது , பாதுகாப்பு பிரச்சனையும் ஏற்படுவதால் இனிமேல் திரையரங்குகளில் டிரைலர் வெளியிடப் போவதில்லை என முடிவு செய்திருப்பதாகவும் கூறியுள்ளார்