கமல் நடிப்பில்,ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு நிறைவடைந்து, இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது இப்படத்தை பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் கமல் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று பல்வேறு விருதுகளை குவித்த நாயகன் திரைப்படம். நவீன டிஜிட்டல் தொழில் நுட்பத்தில்உருவாகியுள்ளது. இப்படம் வரும் நவம்பர் 3 ம் தேதி பிறந்த நாளையொட்டி வெளியாக உள்ளது.
இளையாராஜா இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை,கொஞ்சமும் மாறாமல் (7.1, அட்மாஸ் மற்றும் 5.1 ) அதிநவீன ஒலியமைப்பில் மெருகேற்றப்பட்டுள்ளது .தமிழகத்தில் மொத்தம் 120 திரையரங்குகளில் இப்படத்தை திரையிட உள்ளோம்.
இன்றைய தலைமுறையினருக்கு இப்படத்தின் தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸ் புது அனுபவமாக இருக்கும். முன்னதாக இப்படத்தின் புதிய டிரைலர் விரைவில் வெளியிடபடவுள்ளது.இது குறித்து விரைவில் கமல் ஹாசனை சந்திக்க திட்டமிட்டுள்ளோம். என்கிறார் இப்படத்தை வெளியிடும் மதுராஜ் .