‘ஆரண்ய காண்டம்’ இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கவுள்ள அடுத்த படத்தில் விஜய்சேதுபதி மற்றும் பகத் பாசில் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர். இதற்கான பேச்சு வார்த்தையும் தற்போது நடந்து வருகிறது இந்நிலையில்,இந்த படத்தின் நாயகியாக நடிக்க சமந்தா ஒப்பந்தமாகியுள்ளாராம். இப்படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.