தமிழ் திரையுலகில் கடந்த 2002 இல், பிரசாந்த் மற்றும் சிம்ரன் நடித்த தமிழ் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஹரி தொடர்ந்து சாமி,கோவில்,அருள்,அய்யா,சிங்
சென்னை சாலிகிராமத்தில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில்
கடந்த சில மாதங்களாக உடல் நலக் குறைவு காரணமாக ,ஹரியின் தந்தை கோபாலகிருஷ்ணன் (வயது 88) தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் இன்று காலை காலமானார். அவருக்கு ஐந்து மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.
அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள ஹரியின் இல்லத்தில் திரையுலகினர் அஞ்சலிக்காக இன்று பிற்பகல் 2 மணி வரை வைக்கப்பட்டிருக்கும். பின்னர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அவர்களது சொந்த ஊரான கச்சனாவிளை க்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு நாளை இறுதி சடங்குகள் நடைபெற உள்ளது.