நந்தமுரி கல்யாண் ராம் நடிப்பில்,’டெவில்’ என பரபரப்பாக பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தில் ‘பிரிட்டிஷ் சீக்ரெட் ஏஜென்ட்’ என்ற வாசகத்துடன் வெளியாகிறது. இப்படத்தை அபிஷேக் நாமா இயக்கி, தயாரித்திருக்கிறார்.
இப்படத்தில் நந்தமுரி கல்யாண் ராமுடன் சம்யுக்தா, மாளவிகா நாயர், எல்னாஸ் நோரூஸி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எஸ். சௌந்தர்ராஜன் ஒளிப்பதிவு செய்ய, ஹர்ஷவர்தன் ராமேஸ்வர இசையமைத்திருக்கிறார். கதை, திரைக்கதை, வசனத்தை ஸ்ரீகாந்த் விசா மற்றும் அவரது குழுவினர் எழுதியுள்ளனர்.
இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது. இப்படம் எதிர்வரும் நவம்பர் மாதம் 24 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இதில் நடித்துள்ள நடிகை மாளவிகா நாயரின் கேரக்டர் போஸ்டரை வெளியிட்டு பார்வையாளர்களையும், ரசிகர்களையும் ஆச்சரியப்படுத்தியது. இதனை தொடர்ந்து தற்போது படத்தின் இப்படக்குழுவினர் பாலிவுட்டின் முன்னணி நடிகை எல்னாஸ் நோரூஸி நடித்திருக்கும் ‘ ரோஸி’ எனும் கதாபாத்திர போஸ்டரை வெளியிட்டு, ”திறமை வாய்ந்த நடிகை எல்னாஸ் நோரூஸியை- ‘டெவில் ரோஸி’யாக அறிமுகப்படுத்துகிறோம். என குறிப்பிட்டுள்ளனர்.