கடந்த 2006-ல் ,சுசிகணேசன் இயக்கத்தில் ஜீவன், அப்பாஸ், மாளவிகா நடிப்பில் ‘திருட்டுப்பயலே’ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் பாபிசிம்ஹா மற்றும் பிரசன்னா நடிக்கவுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது.இந்நிலையில் இந்த படத்தின் கதாநாயகியாக அமலாபால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தின் நாயகி கேரக்டர், ஹீரோ மற்றும் வில்லன் கேரக்டருக்கு இணையானது என்பதால் அமலாபால் இந்த கேரக்டருக்கு பொருத்தமாக இருந்தார் என்கிறார் சுசிகணேசன். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.