‘தசரா’ படத்தின் மூலம் பான் இந்தியா அளவில் புகழடைந்து, ‘ஹாய் நான்னா’ எனும் திரைப்படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கும் ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி அடுத்ததாக ‘அந்தே சுந்தரனிகி’ போன்ற கல்ட் பொழுதுபோக்கு படைப்பை வழங்கிய இயக்குநர் விவேக் ஆத்ரேயா உடன் இணைகிறார்.
ஆஸ்கார் விருதை வென்ற ‘ஆர் ஆர் ஆர்’ எனும் திரைப்படத்திற்கு பிறகு, ”சூர்யாவின் சனிக்கிழமை” படத்தை டி வி வி என்டர்டெய்ன்மெண்ட்ஸ் சார்பில் டி வி வி தனய்யா மற்றும் கல்யாண் தாசரி ஆகியோரால் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கப்படுகிறது.இதில் எஸ்.ஜெ. சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
பான் இந்திய திரைப்படமாக உருவாகும் இப்படம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.இப்படத்தில் பணியாற்றும் இணை நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்க உள்ளது.