அழகான தமிழ்ப் பெயர்.மாதங்களில் உயர்வானது மார்கழி என்பார்கள் . ஒரு ஆண்டு என்பது தேவலோகவாசிகளுக்கு ஒரு நாள் என்பதாகவும் ,மார்கழி மாதம் அவர்களுக்கு அதிகாலைப் பொழுதென இறை நம்பிக்கை உள்ளவர்கள் சிறப்பித்து சொல்லுவார்கள். வைகுண்டவாசனை ஆண்டாள் மெய்யுருகி காதலித்து பாடி ,மாலை சூடி மகிழ்ந்தவள் . அவளது காதலுக்கு இணையாகுமா ,இந்தப் படம்?
அந்த உயர்வான மார்கழி மாதத்தின் பெயர் கொண்டு ‘மார்கழி திங்கள் ‘ என திரைப்படம் வெளியாகி இருக்கிறது. முதன்மையான வேடத்தில் இயக்குநர் இமயம் பாரதிராஜா . முக்கிய வில்லனாக இயக்குநர் சுசீந்திரன். கதை திரைக்கதை,வசனம் ,தயாரிப்பும் இவரே.! இசை இளையராஜா.
இயக்கியிருப்பவர் மனோஜ் பாரதி. இமயத்தின் புதல்வர்.அழுகிப்போன சாதீய வெறியை தொட்டிருந்தாலும் மேக்கிங் அருமை. பாரதியின் புதல்வர் என்கிற பெருமையை உயர்த்திப் பிடித்திருக்கிறார்.
ஷியாம் செல்வன்,ரட்சணா இருவரும் நாயகன் நாயகி. அறிமுகங்கள்.
கதை என்ன ?
இங்குதான் விதி தனது கருத்தை கடப்பாரை கொண்டு எழுதி விட்டது.
சாதி வெறிக்கு காதலர்களை கசக்கி முகர்ந்து மோகம் தணிந்திருக்கிறார்கள். சாதீய வீச் சத்தை எத்தனை ஆண்டுகளுக்குத் தான் ரசிப்பார்களோ?
மகன் என்பதால் இயக்குநர் இமயம் சமரசம் செய்து கொண்டு நடித்திருக்கிறார். உடல் நலக் குறைவையும் பொருட் படுத்தாமல் ,நண்பனுக்காக ,மகனுக்காக நடித்து கேரக்டரை உயர்த்திப் பிடித்திருக்கிறார். வயதானாலும் மோசமான வில்லனை “போட்ரு .”என்கிற ஒற்றை சொல்லில் வெடித்திருக்கிறார். நம்பிக்கை மோசடி உயிரனைய பேத்தியிடமே.!
சுசிந்திரனிடம் மிஷ்கினெல்லாம் மடி ஏந்த வேண்டும் ,யப்பப்பா… கழுத்தறுப்பு வில்லத்தனம் என்பதற்கு பொழிப்புரை எழுதி இருக்கிறார் மனிதர் !
ஷியாம் செல்வன்,ரட்சணா இருவரும் அறிமுகங்கள் என்கிற பெயரை நீக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
பின்னணி இசை ,பாடல்கள் இசைஞானியாம்.! பாரதிராஜாவைப்போல இளையராஜாவிடம் மனோஜ் பாரதிக்கு கேட்டு வாங்கத் தெரியவில்லை இனிமையான பாடல்களை.!
மார்கழியின் அருமை ,பட்டும் படாமலும் இருக்கிறது.
–தேவிமணி