நடிகை கவுதமியும், நடிகர் கமல் ஹாசனும் திருமணம் செய்து கொள்ளாமலேயே கடந்த 13 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் நேற்று மதியம் கமல்ஹாசனை விட்டு பிரிவதாக கவுதமி நேற்று தனது டுவிட்டரில் அறிவிப்பு வெளியிட்டார்.இந்நிலையில் கவுதமிக்கும், ஸ்ருதி ஹாஸனுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை தான் அவர் இப்படி ஒரு முடிவை எடுக்க காரணம் என்று கூறப்பட்டது.இந்நிலையில்,இன்று மதியம்,நடிகை ஸ்ருதிஹாசன் சார்பில் அவரது செய்தி தொடர்பாளர் விடுத்துள்ள அறிக்கையில்,’ஸ்ருதி யாருடைய தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் முடிவுகள் குறித்து எப்பொழுதுமே கருத்து தெரிவித்தது இல்லை. எது நடந்தாலும் குடும்பம், பெற்றோர், தங்கைக்கு ஆதரவாக இருப்பார் அவர் என்று தெரிவித்துள்ளார்.