ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ஜப்பான் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இதில் கதாநாயகியாக அனு இம்மானுவேலும், சுனில், வாகை சந்திரசேகர், இயக்குநர்கள் கே.எஸ்.ரவிகுமார், விஜய் மில்டன், மலையாள நடிகர் சணல் அமன் என பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தீபாவளிக்கு வெளியாகும் இந்தப் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்தது
இதில்,கார்த்தி, ராஜுமுருகன் ,தயாரிப்பாளர் எஸ். ஆர்.பிரபு சத்யராஜ், சிபிராஜ், ஜித்தன் ரமேஷ், நந்தா, பொன்வண்ணன், இயக்குனர்கள் சுசீந்திரன், முத்தையா, லோகேஷ் கனகராஜ், பி.எஸ்.மித்ரன், ஹெச்.வினோத், பா. ரஞ்சித் எனபலர் கலந்து கொண்டனர்.திருச்சியில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட ஜப்பான் படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது..
இந்நிகழ்ச்சியில் ஜப்பான் படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டது. 2.19 நிமிடம் ஓடக்கூடிய அந்த டிரைலரில் கார்த்தியின் குரலில்,”ஓபன் பண்ணா ஆ …ன்னு கடல்ல காட்றோம் அதுல ஒரு குட்டி மீனு, அந்த மீனுக்கு 10 வயசு.அந்த குட்டி மீனு அதோட அம்மா மீனுக்காக ஒரு கூட்டு ஓட்ட போட்டுச்சாம்.அங்க ஆரம்பிச்சது குட்டி மீனுக்கு வேட்டை..நண்டுக்கு ஒரு ஓட்டை, தேளுக்கு ஒரு ஓட்டை ,முதலைக்கு ஒரு ஓட்டைன்னு ஓட்டை மேல ஓட்டை போட்டு,அந்த குட்டி மீனு பெரிய திமிங்கலமா மாறிடுச்சாம்.
என குட்டி மீன் திமிங்கலம் ஆகும் கதை யுடன் தொடங்குகிறது
தொடர்ந்து,200 கோடி ரூபாய் பொருளைத் தூக்கும் திருடன், கேரளா பார்டரில் சுற்றுவது, போலீஸ், அமைச்சர் என அனைவரையும் ஜப்பான் அலைய விடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.