கோச்சடையான் படத்தைத் தொடர்ந்து செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கும் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் தனுஷ் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார் என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்தி தான்.தற்போது இப் படத்தில், காஜல் அகர்வால் மற்றும் மஞ்சிமா மோகன் உள்பட மூன்று கதாநாயகிகள் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மூன்றாவது நாயகி குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கும் என்றும், இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்து விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் தெரிகிறது.